துப்பறியும் கதையில் வித்யாபாலன் -  ‘Neeyat’ ட்ரெய்லர் வியாழக்கிழமை ரிலீஸ்

துப்பறியும் கதையில் வித்யாபாலன் -  ‘Neeyat’ ட்ரெய்லர் வியாழக்கிழமை ரிலீஸ்
Updated on
1 min read

பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கும் ‘Neeyat’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மிஷன் மங்கல்’ படத்தைத் தொடர்ந்து நடிகை வித்யாபாலன் நடிக்கும் புதிய படம் ‘Neeyat’. இப்படத்தை அனுமேனன் இயக்குகிறார். அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. ‘சகுந்தலா தேவி’ படத்துக்குப் பிறகு அனுப் மேனனும் - வித்யாபாலனும் மீண்டும் இப்படத்துக்காக இணைகின்றனர்.

ராம் கபூர், ராகுல் போஸ், நீரஜ் கபி, அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். படம் ஜூலை 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. படத்தில் மீரா ராவ் என்ற கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார். கொலையைத் தொடர்ந்து நடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையிலான வித்யாபாலனின் டிடெக்டிவ் கதாபாத்திரம் ரசிகர்களிடையே படத்தின் ஆர்வத்தை கூட்டியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in