

யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் பெயரிடப்படாத படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடிக்கிறார் 'ஆஹா கல்யாணம்' படத்தில் நடித்த வாணி கபூர்.
இதுகுறித்துப் பேசிய படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், ''படத்தில் டைகர் ஷெராஃபும் இணைந்து நடிக்கிறார். இதில் நடிப்பதற்காக இளமையான மற்றும் புதிய எனர்ஜியுடன் கூடிய முகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்த கதாபாத்திரத்துக்கு வாணி கபூர் பொருத்தமாக இருந்தார்.
அவரின் முந்தைய படங்களில் வாணியின் நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். அவரைச் சந்தித்த உடன் என்னுடைய படத்துக்கு அவர்தான் சிறந்த கதாநாயகியாக இருப்பார் என்று முடிவு செய்துவிட்டேன்'' என்றார்.
பெயரிடப்படாத இப்படம் ஜனவரி 25, 2019-ல் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.