முதல் நாளில் உலகம் முழுக்க ரூ.140 கோடியை வசூலித்த ‘ஆதிபுருஷ்’ 

முதல் நாளில் உலகம் முழுக்க ரூ.140 கோடியை வசூலித்த ‘ஆதிபுருஷ்’ 

Published on

பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.140 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் நேற்று (ஜூன் 16) திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.140 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in