

ஹெச்.ஐ.வி கிருமி குறித்து இருக்கும் மூடநம்பிக்கைகளை மக்கள் விட்டொழிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஃபர்ஹான் அக்தர் கூறியுள்ளார்.
வெஸ்பா ரெட் என்ற ஸ்கூட்டர் அறிமுக நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த ஸ்கூட்டர் விற்பனையில் வரும் பணம் இந்தியாவில் எய்ட்ஸுக்கு எதிரான முயற்சிகளுக்கு வழங்கப்படும்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய ஃபர்ஹான், "ஹெச்.ஐ.வி குறித்த மூடநம்பிக்கைகள் இல்லாதவரை நீண்ட காலம் வாழலாம் என்பதுதான் உண்மை. அது மற்றுமொரு வியாதிதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.
இதற்கென வேறொரு விதமான சிகிச்சை கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் அதைச் சுற்றியிருக்கும் மூடநம்பிக்கைகள் அதிகம். அதை நாம் விட்டொழிக்க வேண்டும். ஒவ்வொரு விற்பனையிலும் 50 டாலர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக செலவிடப்படும். அதுவே ஸ்கூட்டரை வாங்குபவருக்கு தனித்துவமான விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்." என்றார்.