

தனத சுயசரிதை புத்தகத்தை சுற்றியிருக்கும் சர்ச்சையின் காரணமாக, அதைத் திரும்பப் பெறுவதாக நடிகர் நவாசுதின் சித்திகி அறிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திகி, ஆன் ஆர்டினரி லைஃப்: எ மெமோயர் (An Ordinary Life: A Memoir) என்ற பெயரில் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியுள்ளார். இதில் தனது காதலி தன்னை விட்டுப் பிரிந்தது, தனக்கும் சக நடிகைக்குமான நெருக்கமான உறவு என அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக எழுதியுள்ளார். இது பெரிய சர்ச்சயை உருவாக்கியுள்ளாது.
நவாசுதினுடன் உறவில் இருந்ததாக சொல்லப்படும் நடிகை நிஹாரிகாவும், நவாசுதினின் முன்னாள் காதலி சுனிதாவும், சுயசரிதையில் இருக்கும் பல தகவல்கள் பொய் என்றும். புகழ்ச்சிக்காகவும், புத்தகம் விற்கவும் நவாசுதின் பொய்களை அடுக்கியுள்ளார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இதோடு, சக நடிகையின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக, டெல்லியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் நவாசுதின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், நவாசுதின் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது சுயசரிதை புத்தகத்தை சுற்றியிருக்கும் குழப்பத்தால் காயமடைந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதனால் வருத்தமுற்று, எனது புத்தகத்தை சந்தையிலிருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன்" என்று அறிவித்துள்ளார்.