

பழைய இந்திப் படங்களை ரீமேக் செய்வது பாலிவுட்டில் அதிகரித்திருக்கலாம். ஆனால் நடிகை வித்யாபாலன், பழைய க்ளாஸிக் படங்கள் மீது கை வைக்கக்கூடாது என்பதை நம்புகிறார்.
மூன்றாம் பிறை படத்தின் இந்தி வடிவம் சத்மா. இதன் புதுயுக ரீமேக்கில், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடிப்பார் என செய்திகள் வந்தன. ஆனால அவர் இதை மறுத்துள்ளார்.
"நான் ஒரு ரீமேக் படத்தில் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு படத்தில் நடிக்க எனக்கு தைரியம் கிடையாது. சத்மா ரீமேக் என்னிடம் வந்தது ஆனால் நான் மறுத்துவிட்டேன். சத்மா போன்ற ஒரு படத்தை யாரும் தொடக்கூடாது. ஏன் அதை மீண்டும் எடுக்க வேண்டும்? அது காலத்துக்கும் நிலைத்து நிற்கும் படம். அதை மீண்டும் வேறு கோணத்தில் பார்க்கலாம் ஆனால் அதற்கான ஆள் நானில்லை. "
இவ்வாறு வித்யாபாலன் கூறியுள்ளார்.