ரூ.190-கோடிக்கு பங்களா வாங்கிய ’லெஜண்ட்’ பட நடிகை ஊர்வசி ரவுதெலா

ரூ.190-கோடிக்கு பங்களா வாங்கிய ’லெஜண்ட்’ பட நடிகை ஊர்வசி ரவுதெலா
Updated on
1 min read

மும்பை: பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா. இவர் தமிழில், ‘லெஜெண்ட்’ படத்தில் நடித்திருந்தார். ‘ஏஜென்ட்’ தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்த இவர், ராம் நடிக்கும் பான் இந்தியா படத்திலும் நடனம் ஆடுகிறார். இவர் மும்பையில் பிரபல தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா வீட்டுக்கு அருகில் ஆடம்பரமான பங்களா வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு ரூ.190 கோடி எனக் கூறப்படுகிறது. மும்பையின் மையத்தில் அமைந்துள்ள இப்பங்களாவில் 4 தளங்கள் உள்ளன. அழகானத் தோட்டம், தனிப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை உள்ளன. கடந்த 7, 8 மாதங்களாக அவர் புதிய பங்களாவைத் தேடி வந்தார். இப்போது இந்தப் பங்களாவை அவர் வாங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in