படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

36 நாட்கள் இரவில் நடந்த போர் தொழில் படப்பிடிப்பு

Published on

அசோக் செல்வன், சரத்குமார் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘போர் தொழில்’. நிகிலா விமல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இ4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜூன் 9-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று வெளியானது.

இந்தப் படம்பற்றி, அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறியதாவது:

இது புலனாய்வு திரில்லர் வகைப்படம். தொடர் கொலைகளைச் செய்யும் குற்றவாளியை பிடிக்க ஓர் இளம் காவல் அதிகாரி நியமிக்கப்படுகிறார். மூத்த அதிகாரியுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம். இருவருக்கும் ஒத்துப்போக மறுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக்கொள்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. நிகிலா விமல் நாயகியாக இல்லாமல் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். த்ரில்லர் படம் என்பதால் இரவில் மட்டும் 36 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். அதற்கு நடிகர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. திரைக்கதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும். இவ்வாறு விக்னேஷ் ராஜா கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in