Last Updated : 19 Oct, 2017 11:16 AM

 

Published : 19 Oct 2017 11:16 AM
Last Updated : 19 Oct 2017 11:16 AM

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி?

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க, புதிய படமொன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

'சதுரங்க வேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்களின் பணிகளை முடித்துவிட்டார் அரவிந்த்சாமி, அதனைத் தொடர்ந்து 'வணங்காமுடி' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கி வரும் 'நரகாசூரன்' மற்றும் மணிரத்னம் இயக்கவுள்ள படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

இதனிடையே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க புதிய படமொன்றுக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தை 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹர்சினி மூவிஸ் தயாரிக்க முன்வந்துள்ளது.

தற்போது பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தை இயக்கிவரும் கே.எஸ்.ரவிக்குமார், அதனைத் தொடர்ந்து அரவிந்த்சாமி நடிக்கவுள்ள படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பணிகளைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x