லியோ பட தோற்றத்தில் விஜய்
லியோ பட தோற்றத்தில் விஜய்

தினமும் விலையில்லா விருந்து: ரசிகர்களை பாராட்டிய விஜய்

Published on

நடிகர் விஜய் இப்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர் பாராட்டியுள்ளார்.

இதுபற்றி விஜய் தரப்பில் விசாரித்தபோது, “தமிழ்நாட்டின் திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், வடசென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், ஏழைகளுக்குத் தினமும் விலையில்லா விருந்து வழங்கி வருகின்றனர். சில பகுதிகளில் காலை, மதியம் என 2 வேளை உணவு வழங்கி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் செய்யும் மன்றத்தினரைப் பாராட்ட வேண்டும் என்று நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி அவர்களைச் சென்னைக்கு அழைத்து நேற்று பாராட்டினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in