உடல் எடையை குறைத்தது ஏன்? - மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன்
Updated on
1 min read

ரஜினியின் ‘பேட்ட’, விஜய்யின் ‘மாஸ்டர்’, தனுஷின் ‘மாறன்’ படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். இப்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடிக்கிறார். இதில் பசுபதி, பார்வதி, பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கோலார் தங்கவயல் பின்னணியில் உருவாகும் கதை இது. இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்திருக்கிறார் மாளவிகா.

இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பற்றி ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மாளவிகா மோகனன், “இதில் சிறப்பான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்த கேரக்டருக்காக, ஒல்லியான, இறுக்கமான உடலமைப்பை இயக்குநர் விரும்பினார். இதனால் எனக்குப் பிடித்த பிரியாணியை தியாகம் செய்துவிட்டு கடினமாகப் பயிற்சி செய்து உடல் எடையை குறைத்தேன். என் கதாபாத்திரத்துக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததும் மீண்டும் எனக்குப் பிடித்த உணவுகளைத் தொடர்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in