Last Updated : 15 Sep, 2017 04:25 PM

 

Published : 15 Sep 2017 04:25 PM
Last Updated : 15 Sep 2017 04:25 PM

இணையத்தில் லீக் ஆன ட்ரெய்லர்: உடனடியாக அதிகாரபூர்வமாக வெளியிட்ட ஸ்பைடர் படக்குழு

'ஸ்பைடர்' படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் லீக்கானதைத் தொடர்ந்து, உடனடியாக அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஸ்பைடர்'. தாகூர் மது தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டது.

'ஸ்பைடர்' படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய பதிப்புகளின் ட்ரெய்லர் இன்று (செப்டம்பர் 15) வெளியாவதாக இருந்தது. ஆனால், முன்னதாக நேற்றிரவே இணையத்தில் ட்ரெய்லர் லீக்கானது. இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது.

மேலும், "ட்ரெய்லரின் அதிகாரபூர்வமில்லாத வடிவம் வெளியாகியுள்ளது. இறுதி வடிவ ட்ரெய்லர் இன்னும் சில மணி நேரத்தில் வெளியிடப்படும்" என்று அப்படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்பு ட்ரெய்லர்களை உடனடியாக இணையத்தில் வெளியிட்டது. சமூக வலைதளத்தில் இதன் ட்ரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

’ஸ்பைடர்’ தமிழ் பதிப்பின் ட்ரெய்லர்:

spyder tamil trailer 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x