நயன்தாரா மற்றும் கமல்
நயன்தாரா மற்றும் கமல்

கமலுடன் இணைகிறார் நயன்தாரா?

Published on

நடிகர் கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு மே மாதம் நடக்க இருக்கிறது. இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல் ஜோடியாக, மூன்றாவது முறையாக த்ரிஷா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாயின. இதற்கு முன் கமலின் ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ படங்களில் த்ரிஷா நடித்திருந்தார். இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in