Last Updated : 05 Sep, 2017 04:07 PM

 

Published : 05 Sep 2017 04:07 PM
Last Updated : 05 Sep 2017 04:07 PM

மொட்டையடித்து நடித்தது ஏன்?- பியா பாஜ்பாய் விளக்கம்

'அபியும் அனுவும்' படத்தில் மொட்டையடித்து நடித்தது ஏன் என்று பியா பாஜ்பாய் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் 'அபியும் அனுவும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜயலட்சுமி இயக்கியுள்ள இப்படத்தில் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதாபாத்திரத்துக்காக மொட்டை அடித்து நடித்துள்ளார் பியா பாஜ்பாய்.

இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பியா பாஜ்பாய் கூறியிருப்பதாவது:

இப்படமும் கதாபாத்திரமும் எனக்கு கிடைத்ததை மிகுந்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இயக்குனர் விஜயலட்சுமி எனக்கு போன் பண்ணி இப்படத்தின் கதையை கூறியபோது கதை என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் உடனே ஒப்புக்கொண்டேன். எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற  கதாபாத்திரம் கிடைப்பது அறிய காரியமே.

இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டும் என்று இருந்தது. அதற்கேற்ப உடனே அதை செய்தேன். கதையின் அழகுக்கு அது தேவைப்பட்டது. மேலும், தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகர் பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள் நான்.

இயக்குனர் விஜயலட்சுமியுடன் பணிபுரிந்த அனுபவம் மிகவும் அருமையானது. அவரது திறனை கண்டு ரசித்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தை அவர் கையாண்ட விதமும், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களிடமிருந்து முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வந்த விதத்தை கண்டு வியந்தேன்.

கதாநாயகன் டோவினோ தோமஸுடன் இது எனக்கு முதல் படம். அபாரமான நடிப்பு திறமையை கொண்டவர் அவர். அவரது தோற்றமும் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. இந்த துணிச்சலான, அழகான காதல் கதையை சினிமா ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்"

இவ்வாறு பியா பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x