Last Updated : 25 Sep, 2017 07:16 PM

 

Published : 25 Sep 2017 07:16 PM
Last Updated : 25 Sep 2017 07:16 PM

கலகலப்பு 2 அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்துக்கு சிவா ஒப்பந்தம்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'கலகலப்பு 2' படத்தின் முக்கிய கதாபாத்திரத்துக்கு சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

டிசம்பரில் 'சங்கமித்ரா' படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக, அக்டோபரில் 'கலகலப்பு 2' படப்பிடிப்பு தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்கவுள்ளார்.

ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ரானி ஆகியோர் 'கலகலப்பு 2' படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

'கலகலப்பு' முதல் பாகத்தில் நாயகனாக நடித்த சிவா, இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை மட்டுமே 2-ம் பாகத்தில் தொடர சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x