Published : 01 Sep 2017 06:28 PM
Last Updated : 01 Sep 2017 06:28 PM

நீட்டுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்: மாணவி அனிதா மரணத்திற்கு கமல்ஹாசன் வேதனை

அனிதாவின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் நீட் ஒரு உயிரைப் பறித்துவிட்டது, இதை விட வேறு அவலம் வேண்டுமா? நீட்டுக்குக்காக வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் அனிதா மரணம் பற்றி வேதனை தெரிவித்தார்.

சாதி, கட்சி மதம் கடந்து நியாயத்துக்காக போராட வேண்டும். கட்சிகளை கடந்து போராட வேண்டும். அனிதா என்ற பெண் எனக்கும் பெண்தான். அவரது மரணம் வேதனை அளிக்கிறது.

இந்த துயரம் இனி நிகழக்கூடாது. அவர் வாங்கிய மார்க் மிக அதிகம், ஆனால் நல்ல மருத்துவரை நாம் இழந்து விட்டோம். மத்திய, மாநில, நீதிமன்றங்களில் வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை மண்ணோடு மண்ணாக்கி விட்டோம்.

மனதை தளரவிடக் கூடாது. மாணவி தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். எங்களைவிட திருமாவளவன் போன்றவர்கள் தான் வெகுண்டெழுந்து போராடவேண்டும், மக்களும் போராட களமிறங்க வேண்டும். என்று கமல்ஹாசன் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x