Last Updated : 01 Sep, 2017 04:51 PM

 

Published : 01 Sep 2017 04:51 PM
Last Updated : 01 Sep 2017 04:51 PM

நடிப்புக்கும் காப்புரிமை வாங்கலாம்: நடிகர்களுக்கு கிராபிக்ஸ் வல்லுநர் யோசனை

நடிப்புக்கும் காப்புரிமை வாங்கலாம் என்று முன்னணி நடிகர்களுக்கு கிராபிக்ஸ் வல்லுநர் யோசனை தெரிவித்துள்ளார்.

'மகாதீரா', 'நான் ஈ', 'புலி', 'பாகுபலி 2' உள்ளிட்ட பல படங்களுக்கு கிராபிக்ஸ் வல்லுநாராக பணிபுரிந்தவர் கமலக்கண்ணன். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணிபுரிந்து வருகிறார்.

முன்னணி நடிகர்களுக்கு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் காப்புரிமைத் தொடர்பாக வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார். அதில் கமலக்கண்ணன் கூறியிருப்பதாவது:

நமது கதாநாயகர்கள், நாயகிகளின் முழு உடலை, அவர்களது இயற்கையான தோல் மற்றும் நிறத்தின் தன்மை மாறாமல் 3டியில் ஸ்கான் செய்யும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. அதே போல, ஒரு குறிப்பிட்ட வசனம் பேசும்போது அவர்கள் முகபாவம், அவர்கள் நடை, ஓட்டம், நடனம், பாணி என அனைத்தும் சேகரிக்க முடியும். ஆனால் 100 சதவிதம் டிஜிட்டல் நடிகர்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்னும் வரவில்லை.

ஆனால் அடுத்த 12-15 வருடங்களில் அது சாத்தியம் என கணிக்கிறேன். ஏன் நமது நட்சத்திரங்கள் நான் மேற்சொன்ன விஷயங்களை காப்புரிமையுடன் சேமித்து வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடாது?

இவ்வாறு கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x