‘சினிமா பின்னணி இல்லை என்றால் வாய்ப்புக்காக போராட வேண்டும்’ - பிரியங்காவுக்கு நீது சந்திரா ஆதரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி சினிமாவில் இருந்து தான் ஓரங்கப்பட்டதாக சமீபத்தில் அளித்திருந்த பேட்டி பரபரப்பானது.

“யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வராததால் இந்தி சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டுப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில் தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது” எனத் தெரிவித்திருந்தார்.

பிரியங்காவுக்கு ஆதரவாக கங்கனா ரனாவத், விவேக் அக்னிஹோத்ரி, சேகர் சுமன், மீரா சோப்ரா உட்பட பல திரைத்துறையினர் கருத்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தி சினிமாவில் அதிக வாய்ப்பில்லாததால், ஹாலிவுட் சென்றுவிட்ட நடிகை நீது சந்திரா, பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “இது ஒருவருக்கு மட்டும் நடக்கும் விஷயமல்ல. எல்லோருக்குமே இந்த நிலைதான். சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றால், நீங்கள் வாய்ப்புக்காக போராட வேண்டும். அப்படியே கிடைத்தாலும் அதற்கு காலநேரம் அதிகமாகும். இதை பிரியங்காவும் உணர்ந்துள்ளார். பலர் உணர்ந்திருக்கிறார்கள். இதுபற்றி முன்வந்து பேசுகிறீர்களா இல்லையா என்பதுதான் விஷயமே. நான் இதுபற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நீது சந்திரா தமிழில், ‘யாவரும் நலம்’, ‘தீராதவிளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதிபகவன்’,‘வைகை எக்ஸ்பிரஸ்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in