சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது: பாரபட்ச ஊதியம் பற்றி சமந்தா

சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது: பாரபட்ச ஊதியம் பற்றி சமந்தா
Updated on
1 min read

சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் அடுத்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சகுந்தலை, துஷ்யந்தன் காவிய காதலை மையப்படுத்தி குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இதன் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள சமந்தா, சினிமாவில், பாரபட்சமான சம்பளம் கொடுக்கப்படுவது குறித்தும், தன் உடல் நிலை குறித்தும் கூறியிருப்பதாவது:

தீவிர உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என நம்புகிறேன். தயாரிப்பாளர்கள் தாங்களாக முன் வந்து சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். அதற்காகப் போராடுகிறேன். அது, அவர்களைப் போல எங்களுக்கும் சமமாக சம்பளம் வேண்டும் எனக் கேட்டு போராடுவது போல் அல்ல.

கடின உழைப்பு மற்றும் வெற்றியின் மூலம் தயாரிப்பாளர்கள் அதைக் கொடுக்கவேண்டும். அதற்காக கெஞ்சக் கூடாது. யாசகம் கேட்பதாக இருக்கக்கூடாது. திறமையை, முடிந்த அளவுக்கு வளர்த்து கொள்ள வேண்டும். ஒரே மாதிரியாக அனைத்து நாட்களும் இருக்காது. ஏற்றத் தாழ்வுகள் இருக்கும்.

என் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் எனக்காகக் காத்திருந்தனர். தேவையான அனைத்தையும் அவர்கள் கொடுத்தனர். அதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். கடந்த 2 வருடங்கள், மனரீதியாவும் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் என்னை மாற்றியிருக்கின்றன.

சாகுந்தலம், யசோதா படப்பிடிப்புகளின் போது எனக்கு மயோசிடிஸ் நோய் கண்டறியப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் உடல்ரீதியாக நான் நன்றாகவே இருந்தேன். இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in