Last Updated : 22 Sep, 2017 10:55 AM

 

Published : 22 Sep 2017 10:55 AM
Last Updated : 22 Sep 2017 10:55 AM

மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு

பிரமதர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

'காலா' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனிடையே பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன். தூய்மையே தெய்வீகம்.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x