தசரா படத்துக்கு சென்சார் 36 கட்

தசரா படத்துக்கு சென்சார் 36 கட்

Published on

தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள ‘தசரா’ படம் வரும் 30ம் தேதி வெளியாகிறது. பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழிலும் ரிலீஸ் ஆகிறது.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ள இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை சமீபத்தில் தணிக்கைக் குழுவினர் பார்த்தனர். படத்தின் சில இடங்களில் ஆபாச வசனங்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதை நீக்கச் சொன்ன அதிகாரிகள், மது குடிக்கும் காட்சிகள் இடம்பெறும் இடத்தில் வரும் சப் டைட்டிலின் எழுத்துருவை பெரிதாக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

சில வசனங்களை ‘மியூட்’ செய்துள்ள அவர்கள், 36 ‘கட்’களுக்கு பின் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in