மும்பையில் வீடு வாங்கிய சூர்யா - ஜோதிகா தம்பதியர்

சூர்யா - ஜோதிகா | கோப்புப்படம்
சூர்யா - ஜோதிகா | கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழ்த் திரையுலகின் நட்சத்திர தம்பதியரான சூர்யா - ஜோதிகா இணையர் மும்பை மாநகரில் 9,000 சதுர அடியில் ரூ.70 கோடி மதிப்பில் வீடு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசியல் பிரபலங்கள் வசித்து வரும் பகுதியில் இந்தக் குடியிருப்பு அமைந்துள்ளதாம். இது சூர்யாவின் குடும்பத்திற்கு கெஸ்ட் ஹவுஸ் போன்ற பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மும்பையிலேயே குடியிருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காகவே இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பதாகவும், மும்பைக்கு முழுமையாக குடிபெயரும் திட்டம் எதுவும் இல்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2006-ல் சூர்யா - ஜோதிகா திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து இல் வாழ்க்கையில் இணைந்தவர்கள். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். 2டி என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். விரைவில் இந்தி சினிமாவில் முக்கியக் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தகவல். தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in