Last Updated : 18 Sep, 2017 07:47 PM

 

Published : 18 Sep 2017 07:47 PM
Last Updated : 18 Sep 2017 07:47 PM

மிகச்சிறந்த த்ரில்லர்: துப்பறிவாளன் படத்துக்கு ஷங்கர் பாராட்டு

விஷால் நடித்திருக்கும் 'துப்பறிவாளன்' படத்தைப் பார்த்துவிட்டு, இயக்குநர் ஷங்கர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் 'துப்பறிவாளன்'. இதில் பிரசன்னா, வினய், இயக்குநர் கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். செப்டம்பர் 14-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தைப் பார்த்த முன்னணி இயக்குநரான ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "’துப்பறிவாளன்’ இயக்குநர் மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைலில் உருவான மிகச்சிறந்த திர்ல்லர் திரைப்படம். விஷாலின் கதாபாத்திரம் மற்றும் அவருடைய நடிப்பு நன்றாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

முதல் 4 நாட்களில் சுமார் 10 கோடி வசூல் செய்திருப்பதால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் விஷால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x