Published : 15 Sep 2017 20:24 pm

Updated : 15 Sep 2017 20:24 pm

 

Published : 15 Sep 2017 08:24 PM
Last Updated : 15 Sep 2017 08:24 PM

மணிரத்னத்தின் அடுத்த பட நாயகர்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'காற்று வெளியிடை' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம். இதனால் அவ்வப்போது பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை மணிரத்னம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை பெரும் பொருட்செலவில் தங்களுடைய 17-வது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அடுத்தாண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author