“அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” - இயக்குநர் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் | கோப்புப்படம்
விக்னேஷ் சிவன் | கோப்புப்படம்
Updated on
1 min read

“வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை விக்னேஷ் சிவனும் உறுதி செய்திருந்தார். ஆனால், தயாரிப்பு நிறுவனத்தின் அழுத்தம் காரணமாக படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாகவும், அதற்கு பதிலாக மகிழ்திருமனி 'ஏகே 62' படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களை சுவாசிக்கவும், உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது. பாராட்டும் வெற்றியும் நமக்கு கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது.

#neverevergiveup அடுத்த படத்திற்கு தயாராகிறேன். கடவுளுக்கும், என்னுடைய கடினமான இந்த காலக்கட்டத்தில் என்னுடன் இருந்தவர்களுக்கும் நன்றி. என் மீதான உங்களின் நம்பிக்கை நான் யாரென்று என்னை அடையாளம் காண மட்டும் உதவவில்லை. எதிர்பாராத தருணங்களில் உறுதியுடன் இருப்பதற்கான நம்பிக்கையை கொடுத்துள்ளது. உங்களால் நான் மகிழ்ச்சியாக எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in