

20 ஆண்டுகளை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது என கேட்டதற்கு, “திரும்பி பார்த்தால் நின்றுவிடுவேன். அதனால் திரும்பி பார்ப்பதேயில்லை” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
‘அகிலன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, “அகிலன் படத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் மார்ச் 10-ம் தேதி வெளியாகிறது. 2024-ம் ஆண்டு ‘தனியொருவன்-2’ உருவாகும். பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய உழைப்பால் முன்னேறியவர். அவரை நான் வெறும் அறிமுகம் மட்டும் தான் செய்தேன். மற்ற அனைத்தும் அவருடைய முயற்சி.
‘அகிலன்’ படத்தில் பசியைப்பற்றி பேசியிருக்கிறோம். நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார். 20 ஆண்டுகளை திரும்பி பார்க்கும்போது எப்படியிருக்கிறது என கேட்டதற்கு, “திரும்பி பார்த்தால் நின்றுவிடுவேன். அதனால் திரும்பி பார்ப்பதேயில்லை. நல்ல படங்களை செய்ய வேண்டும் என்பதுதான் என் லட்சியம். அதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். ரசிகர்களின் அன்பு என்னை தொடர்ந்து பயணிக்க உதவியிருக்கிறது” என்றார்.