Published : 03 Mar 2023 08:31 PM
Last Updated : 03 Mar 2023 08:31 PM

ஒரு நாள்... மூன்று கதைகள்... - அதர்வாவின் ‘நிறங்கள் மூன்று’ ட்ரெய்லர் எப்படி?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘மாஃபியா’, ‘மாறன்’ படங்களை இயக்கினார். அடுத்தாக அவர் அதர்வாவை வைத்து இயக்கியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. ரகுமான், சரத்குமார், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஐயங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? வித்தியாசமான ட்ரெய்லராக வெட்டப்பட்டிருக்கும் இதில் தொடக்கத்தில் அதர்வா கதையை விவரிக்கிறார். 3 கதைகளுடன் விரியும் ட்ரெய்லரின் காட்சிகளை கதையை கணிக்க முடியாத வகையில் கச்சிதமாக கட் செய்யப்பட்டுள்ளது. சினிமா ஆசை கொண்டுள்ள ஒருவன், ஊழல் செய்யும் காவல் துறை அதிகாரி, மாணவர் மூவரையும் மையப்படுத்திய ட்ரெய்லர் சொல்லவருவதை கணிக்க முடியவில்லை. காட்சிகளில் பின்னணி இசை கவர்கிறது. ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையாக படம் உருவாகியிருப்பதை உணர முடிகிறது. வித்தியாசமான இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x