உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ ட்ரெய்லர் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ்

உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’ ட்ரெய்லர் ஞாயிற்றுக்கிழமை ரிலீஸ்

Published on

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ட்ரெய்லர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கலகத் தலைவன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து உதயநிதி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘கண்ணை நம்பாதே’. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை அடுத்து மு.மாறன் இயக்கும் படம் இது.

இதில் ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா உட்பட பலர் நடித்துள்ளனர். சித்துக்குமார் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிப்பி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித்குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள ‘மாமன்னன்’ படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in