தமிழ் சினிமா
அருண் விஜய்யின் பார்டர் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
அருண் விஜய்யும் இயக்குநர் அறிவழகனும் ‘குற்றம் 23’ படத்தை அடுத்து மீண்டும் இணைந்துள்ள படம் ‘பார்டர்’. இதில் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் நாயகிகளாக நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் ரிலீஸ் தேதி பலமுறைத் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் 24 ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இதன் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
