பழனி கோயிலில் சமந்தா சாமி தரிசனம்

பழனி கோயிலில் சமந்தா சாமி தரிசனம்
Updated on
1 min read

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, 5 மாதம் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் சிகிச்சைப் பெற்றுவந்தார். இப்போது அதில் இருந்து மீண்டுள்ள அவர், ராஜ் மற்றும் டீகே இயக்கும் ‘சிட்டாடல்’ என்ற வெப் தொடரில் நடித்துவருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ ஏப். 14ல் வெளியாகிறது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு, பழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

படிக்கட்டு வழியாகச் சென்ற அவர், 600 படிக்கட்டுகளில் சூடம் ஏற்றி நேர்த்திக்கடனைச் செலுத்தினார். இதையடுத்து அவருக்குச் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சமந்தாவுடன் ‘96’ பட இயக்குநர் பிரேம்குமாரும் வந்திருந்தார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சமந்தா,வேண்டுதலை நிறைவேற்றவே பழனி முருகன் கோவிலுக்கு வந்ததாகத் தெரிவித்தார். சமந்தா, பழனிக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in