ஜூனியர் என்டிஆரை இயக்கும் வெற்றிமாறன்?

ஜூனியர் என்டிஆரை இயக்கும் வெற்றிமாறன்?

Published on

இயக்குநர் வெற்றிமாறன் ஜூனியர் என்டிஆரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன.

சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடிகர் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்டிஆரை சந்தித்து மூன்று கதைகள் சொல்லி இருக்கிறாராம் வெற்றிமாறன். அதில், ஒரு கதை ஜூனியர் என்டிஆருக்கு பிடித்துப்போக உடனே ஓகே செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறனின் இயக்கம் பற்றியும் அவர் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் தனக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறது என ஜூனியர் என்டிஆர் கூறியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in