Published : 02 Feb 2023 06:28 PM
Last Updated : 02 Feb 2023 06:28 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய்67’ படத்தின் தலைப்பு நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கியது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பு நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ப்ரோமோ வீடியோவும் நாளை வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Naanga summave kaatu kaatunu kaatuvom.. #Thalapathy67 TITLE is loading
— Seven Screen Studio (@7screenstudio) February 2, 2023
Revealing at 5 PM Tomorrow #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss#Thalapathy67TitleReveal pic.twitter.com/FU61rBU55g
Sign up to receive our newsletter in your inbox every day!