Published : 01 Feb 2023 06:21 AM
Last Updated : 01 Feb 2023 06:21 AM

சமந்தாவின் ‘குஷி’ ஷூட்டிங் எப்போது?

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லட்சுமி, ரோகிணி, சரண்யா உட்பட பலர் நடிக்கின்றனர். பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. கடந்த டிசம்பர் 23ம் தேதி படத்தை வெளியிட இருந்தனர்.

சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் உடல் நலம் தேறியுள்ள சமந்தா மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். இப்போது ராஜ் மற்றும் டீகே இயக்கும் வெப் தொடரில் பங்கேற்று வரும் அவர், அடுத்து ‘குஷி’ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் கூறும்போது, “இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. அனைத்தும் சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x