Published : 01 Feb 2023 04:17 AM
Last Updated : 01 Feb 2023 04:17 AM

கோவையில் பிப்.26-ல் பிரபல பாடகி ஜொனிதா காந்தி இசை நிகழ்ச்சி

கோவையில் பிரபல பாடகி ஜொனிதா காந்தி நேரடி இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

கோவை: பிரபல பின்னணி பாடகியான ஜொனிதா காந்தியின் இசை கச்சேரி கோவை கொடிசியா மைதானத்தில் வரும் 26-ம் தேதி நடக்கிறது. இந்தோ - கனடிய பாடகரான இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி என 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தில் இவர் பாடிய அரபி குத்து பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழகத்திலேயே கோவையில் முதல் முறையாக ஜொனிதா காந்தியின் நேரடி இசை கச்சேரி நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அருண் ஈவென்ட்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அருண் ஈவென்ட்ஸ் அருண் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, ‘‘பிப்ரவரி 26-ம் தேதி மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி தொடங்குகிறது. ஜொனிதா காந்தி இடைவிடாமல் தொடர்ந்து இரண்டரை மணிநேரம் தனது இசை குழுவினரோடு பாட உள்ளார். இதில் 60 சதவீதம் தமிழ் பாடல்கள் பாடப்படும்.

பிற மொழி சார்ந்த பாடல்களும் கச்சேரியில் இடம்பெறும். 25,000 முதல் 40,000-க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்வை காண வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். டிக்கெட்டின் ஆரம்ப விலை ரூ.500 தொடங்கி ரூ.5000 வரை உள்ளது. புக் மை ஷோ, பேடிஎம் இன்சைடர், ஸ்போர்பை ஆகிய தளங்களில் டிக்கெட் கிடைக்கும்.

விரைவில் ஹோட்டல்கள் மற்றும் மால்களில் கிடைக்கும். தற்போது 60% டிக்கெட்கள் விற்பனையாகி விட்டன. டிக்கெட் தொடர்புக்கு : 99423 15886, 99523 59888, 98654 96622. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x