

சென்னை: இயக்குநர் அட்லீ - நடிகை ப்ரியா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை ப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்து, பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் அட்லீ. இது தவிர சினிமா படத் தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் மூன்று படங்களில் அட்லீ பணியாற்றியுள்ளார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், அட்லீ - ப்ரியா தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தம்பதியருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
“எல்லோரும் சொன்னது சரிதான். இப்படி ஓர் உணர்வு உலகில் இல்லை. அது போலவே இப்போது எங்களது மகன் இங்கு உள்ளார். பெற்றோர் எனும் பயணத்தை நாங்கள் இனிதே இன்று தொடங்குகிறோம்” என ப்ரியா தெரிவித்துள்ளார்.