ஒரு தந்தையின் வலியை பொம்மை நாயகி உணர்த்தும்: யோகிபாபு

ஒரு தந்தையின் வலியை பொம்மை நாயகி உணர்த்தும்: யோகிபாபு
Updated on
1 min read

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ஷான் இயக்கியுள்ளார். கதாநாயகியாக சுபத்ரா நடிக்க, யோகிபாபு மகளாகக் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிப்.3ம் தேதி படம் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பா.ரஞ்சித் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் யோகிபாபு பேசியதாவது:

இந்தப் படம் தந்தை -மகள் கதை என்பதால் ஓர் அப்பாவின் வலி என்ன என்பதை உணர்த்தும் விதமாக உருவாகியுள்ளது. கடந்த 5 மாதங்களாக தந்தையாக நானும் அதை உணர்கிறேன். இந்தப் படத்துக்காக இயக்குநர் ஷான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்.

சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களைத் தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எப்போதுமே காமெடி நடிகன் தான். அதே நேரம் இந்த முகத்தில் கூட ஏதோ ஒன்று தெரிகிறதே என நினைத்து, நம்பி அழைத்தால் நாயகனாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in