Published : 28 Jan 2023 12:13 PM
Last Updated : 28 Jan 2023 12:13 PM

விவசாய கருவிகளை உருவாக்க போட்டி: கார்த்தி தகவல்

நடிகர் கார்த்தி, தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்க, உழவன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுகிறது.

அதன்படி, கால்நடை துறையில் சிறந்த பங்களிப்புக்கான விருது வெற்றிவேலுக்கும் சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருது, கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழுவிற்கும், மரபு விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கத்திற்கான விருது சண்முகசுந்தரத்துக்கும் வேளாண் பங்களிப்புக்கான விருது வானகம் ரமேஷுக்கும் சிறந்த வேளாண் ஆர்வலருக்கான விருது தினேஷ்குமாருக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், ராஜ்கிரண், பொன்வண்ணன், இயக்குநர் பாண்டிராஜ், பேராசிரியர் சுல்தான்இஸ்மாயில், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, சித்தமருத்துவர் சிவராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுகளை வழங்கி நடிகர் கார்த்திபேசும்போது, “ சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டி ஏற்பாடு செய்திருக்கிறோம். இதற்கு அண்ணா பல்கலையும்உடன் இருக்கிறது. ஏனென்றால், பொறியியலாளர் களால் தான் சுலபமாகவும், எளிமையாகவும் உருவாக்க முடியும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x