Published : 23 Jan 2023 11:17 AM
Last Updated : 23 Jan 2023 11:17 AM

‘ஆர்.ஆர்.ஆர்’ பாலிவுட் படமா? - ஹாலிவுட் நடிகைக்கு எதிர்ப்பு

ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உட்பட பலர் நடித்து வெற்றி பெற்ற படம், ‘ஆர்.ஆர்.ஆர்’. இதில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருதை வென்ற இந்தப் படம், அடுத்து ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் இயக்குநர்கள் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட இயக்குநர்களை ராஜமவுலி சந்தித்துப் பேசினார். அவர்கள் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைப் பாராட்டினர்

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜானே ஃபாண்டா, தன்னுடைய சிறந்த படங்களின் பரிந்துரைப் பட்டியலில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும் குறிப்பிட்டுள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில், தன்னை ஆச்சரியப்படுத்திய படம் இது என்றும் இண்டியானா ஜோன்ஸ் படத்தின் கலவை என்றும் தெரிவித்துள்ள அவர், பாலிவுட் படம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ரசிகர்கள், ‘அது டோலிவுட் படம். இண்டியானா ஜோன்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை’ என்று ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளனர். சிலர், ஹாலிவுட் நடிகை இந்திய படம் ஒன்றைப் பாராட்டியதற்காக மகிழ்ச்சி அடையலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x