‘கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம்’ - ப்ரியா பவானி சங்கரின் ரெஸ்டாரண்ட்

‘கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம்’ - ப்ரியா பவானி சங்கரின் ரெஸ்டாரண்ட்

Published on

நடிகை ப்ரியா பவானி சங்கர் புதிதாக ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர், ‘அகிலன்’, ‘டிமாண்டி காலனி’, ‘ருத்ரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பல்வேறு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இந்த சூழலில் அவர் தற்போது புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “எங்களது சொந்த உணவகம். இதுதான் எப்போதும் எங்களது கனவாக இருந்தது. இந்த நாளை நெருங்குகையில் மிக்க மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. நாங்கள் எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பரிமாற காத்திருக்கிறேன். லியாம் டினர் - விரைவில் சேவை தொடங்கும்” என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in