திருமணம் பற்றியே கேட்கிறார்கள் - மோனல் கஜ்ஜார் எரிச்சல்

திருமணம் பற்றியே கேட்கிறார்கள் - மோனல் கஜ்ஜார் எரிச்சல்
Updated on
1 min read

தமிழில், விக்ரம் பிரபு நடித்த‘சிகரம் தொடு’, கிருஷ்ணா நடித்த ‘வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் மோனல் கஜ்ஜார்.

தெலுங்கு, குஜராத்தி படங்களிலும் நடித்து வரும் அவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது இந்தியிலும் நடித்து வருகிறார். அவர் சமூக வலைதளத்தில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது சிலர் எப்போது திருமணம்? என்று கேட்டனர்.

அதற்கு, “எல்லோரும் திருமணம் பற்றியே தொடர்ந்து கேட்கிறார்கள். இப்போதுவரை என்னிடம் அந்தத் திட்டம் இல்லை. ஒருவேளை, சரியான நபரை சந்திக்க நேர்ந்தால் திருமணம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறேன். நான் ரகசியமாக யாரையும் காதலிக்கவில்லை” என்றார். இந்நிலையில் மோனல் , ஆன்மிகத்தின் பக்கம் திரும்பி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in