ஷாருக்கான் | கோப்புப்படம்
ஷாருக்கான் | கோப்புப்படம்

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் டாம் குரூஸ், ஜாக்கி சானை முந்திய ஷாருக்கான்

Published on

சென்னை: உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் டாம் குரூஸ் மற்றும் ஜாக்கி சானை இந்திய நடிகர் ஷாருக்கான் முந்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் சினிமாவின் அரசர் என போற்றப்படும் அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 770 மில்லியன் டாலர்கள். இது அண்மையில் வெளியாகி உள்ள தரவுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிப்பது மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் ஷாருக்கான். அதில் விஎப்எக்ஸ் மற்றும் விளையாட்டும் அடங்கும். விரைவில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள பதான் திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது. தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரும் அவருடன் நடித்துள்ளனர்.

உலக அளவிலான பணக்கார நடிகர்களில் டாம் குரூஸ் மற்றும் ஜாக்கி சானை அவர் முந்தியுள்ளார் தகவல். முதல் இடத்தை 1 பில்லியன் டாலர்களுடன் ஜெர்ரி சீன்ஃபீல்ட் மற்றும் டைலர் பெர்ரி பகிர்ந்து கொண்டுள்ளனர். அடுத்த இடத்தில் ‘ராக்’ என்ன பரவலாக அறியப்படும் டுவைன் ஜான்சன் 800 மில்லியன் டாலர்களுடன் உளார். ஷாருக் 770 மில்லியனர் டாலர்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

டாம் குரூஸ் 620 மில்லியன் டாலர்கள், ஜாக்கி சான் 520 மில்லியன் டாலர்கள், ஜார்ஜ் குளூனி மற்றும் ராபர்ட் டி நீரோ தலா 500 மில்லியன் டாலர்களை கொண்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in