

ஆசியத் திரைப்ட விருதுகள் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிய திரைப்படங்களை கவுரவிப்பதற்காக, ஹாங்காங்கைச் சேர்ந்த ஆசிய திரைப்பட விருது அகாடமி இதை வழங்கி வருகிறது. அதன்படி 16 வது திரைப்பட விருதுகள், மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங் அரண்மனை மியூசியத்தில் வழங்கப்பட இருக்கிறது. இதில் இந்தியாவில் இருந்து 2 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’, சிறந்த இசை, சிறந்த திரைப்படம், படத்தொகுப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஆடை வடிமைப்பு ஆகிய 6 பிரிவுகளிலும் ராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய 2 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.