லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங் தொடக்கம்

லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங் தொடக்கம்
Updated on
1 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு ரிலீசான படம், ‘ஜிகர்தண்டா’. பாபி சிம்ஹா, சித்தார்த் உட்பட பலர் நடித்த இந்தப் படம் ஹிட்டானது. 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. இப்போது இதன் 2ம் பாகம் உருவாகிறது. ராகவாலாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். திருநாவுக்கரவு ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச்நிறுவனமும், பைவ் ஸ்டார் கதிரேசனும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. படத்தின் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in