ஸ்ருதி, அக்‌ஷராவுக்கு அறிவுரை சொல்வதில்லை: நடிகை சரிகா

ஸ்ருதி, அக்‌ஷராவுக்கு அறிவுரை சொல்வதில்லை: நடிகை சரிகா

Published on

நடிகர் கமல்ஹாசனும் இந்தி நடிகை சரிகாவும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஸ்ருதி, அக்ஷரா ஹாசன் என 2 மகள்கள். இவர்கள் திரைப்படங்களில்நடித்து வரும் நிலையில், சரிகாவும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

“என் மகள்கள் ஸ்ருதிஹாசனும் அக்‌ஷராவும் நடிகைகளாக இருப்பதில் மகிழ்ச்சி. அவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் சுதந்திரமானவர்கள். தங்கள் வாழ்க்கையில் முத்திரைப் பதிக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். அனைத்து பெற்றோரும் தங்கள் பிள்ளைகளிடம் என்ன பேசுவார்களோ அதைத்தான் நானும் பேசுகிறேன். அவர்கள், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைச் சொல்கிறார்கள். நானும் அவர்களிடம் சில விஷயங்களைச் சொல்கிறேன். ஆனால், அது அறிவுரையாக அல்ல. சினிமாவில் இப்போது வேலை செய்யும் பாணி வித்தியாசமாக இருக்கிறது”

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in