நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் மரணம்

நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் மரணம்
Updated on
1 min read

பட்டுக்கோட்டை: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 67.

இயக்குநர் விசு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி. முதல் படமாக பூந்தோட்டம் அமைந்தாலும் விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் தோன்றி வந்த சிவ நாராயணமூர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உட்பட பலரின் படங்களில் நடித்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவரின் சொந்த ஊர் பட்டுக்கோட்டை. பட்டுக்கோட்டையில் வசித்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட இன்றிரவு 8.30 மணியளவில் இறந்துள்ளார். இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.

இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனிடையே, ஊர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலக வட்டாரங்களில் அவரின் இறப்பு செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in