காந்தாரா முதல் விக்ரம் வரை: 2022-ல் கூகுள் தளத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய படங்களின் பட்டியல்

விக்ரம் படத்தில் கமல்ஹாசன்
விக்ரம் படத்தில் கமல்ஹாசன்
Updated on
1 min read

2022-க்கு அடுத்த சில நாட்களில் அனைவரும் விடை கொடுக்க உள்ளோம். 2023-ம் ஆண்டை வரவேற்க உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் கூகுள் தளத்தில் இதுவரை இந்திய அளவில் உள்ள பயனர்கள் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு நேரடி தமிழ் திரைப்படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருவதில் சிக்கல் இருந்தது. அதன் காரணமாக திருவிழா காலம் போல பார்வையாளர்களின் தலைகள் நிரம்பி காணப்படும் திரை அரங்குகள் வெறிச்சோடி இருந்தன. இதற்கு கரோனா கட்டுப்பாடுகளும் ஒரு காரணம். ஆனால், அந்த கட்டுப்பாடுகள் நடப்பு ஆண்டில் இல்லை. அதன் காரணமாக மீண்டும் வழக்கம்போல பார்வையாளர்கள் தங்கள் மனம் கவர்ந்த திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுத்தனர். இதில் சில படங்களை புறக்கணிக்கும் ட்ரெண்டும் இருந்தது.

இந்தs சூழலில் 2022-ல் கூகுள் தளத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் பான் இந்தியா அளவில் கவனம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியல் ரசிகர்களின் சேர்ச் எண்ணிக்கையை பொறுத்து வரிசைபடுத்தப்பட்டுள்ளது.

  1. பிரம்மாஸ்திரா: பாகம் 1 - சிவா
  2. கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2
  3. தி காஷ்மீர் ஃபைல்ஸ்
  4. ஆர்ஆர்ஆர்
  5. காந்தாரா
  6. புஷ்பா
  7. விக்ரம்
  8. லால் சிங் சத்தா
  9. த்ரிஷ்யம் 2
  10. தோர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in