Last Updated : 28 Dec, 2016 12:32 PM

 

Published : 28 Dec 2016 12:32 PM
Last Updated : 28 Dec 2016 12:32 PM

மீண்டும் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி

'காஷ்மோரா' படத்தைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் கோகுல்.

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில், கோகுல் இயக்கத்தில் வெளியான படம் 'காஷ்மோரா'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் போது அளித்த பேட்டியில், "இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 2ம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார் கோகுல்.

தற்போது, விஜய் சேதுபதி - கோகுல் இணையும் படம் உறுதியாகியுள்ளது. ஆனால், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 2ம் பாகமின்றி, புதிதாக ஒரு கதையை உருவாகியுள்ளார் கோகுல். ஆக்‌ஷன் மற்றும் காமெடி பின்னணியைக் கொண்டு இக்கதையை உருவாகி இருக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 2017ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இப்பட பணிகள் துவங்கும் என்று தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x