‘நீர்ப்பறவை - பாகம் 2’ தொடங்கப்படும் - இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

‘நீர்ப்பறவை - பாகம் 2’ தொடங்கப்படும் - இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு

Published on

‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என இயக்குநர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘நீர்ப்பறவை’. இந்தப் படத்தில் சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, தம்பி ராமையா,‘பூ’ ராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன.

மேலும், படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தின் வசனங்களை இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்து ஜெயமோகன் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “நீர்ப்பறவை பாகம் இரண்டு தொடங்கப்படும். நீர்ப்பறவை அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடுகட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைப்பெருமக்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in