Published : 30 Nov 2022 02:26 PM
Last Updated : 30 Nov 2022 02:26 PM

சம்பளத்தை உயர்த்தவில்லை: ஐஸ்வர்யா லட்சுமி மறுப்பு

தமிழில் ‘ஆக்‌ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’ படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இவர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாகக் கூறப்பட்டது.

அதை மறுத்துள்ள அவர், அந்தப் படத்தின் வெற்றிக்கு கதையும் இயக்குநர் மணிரத்னமும்தான் காரணம் என்றும் அதில் தானும் ஒரு பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘கட்டா குஸ்தி’ டிச.2ம் தேதி வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x