Published : 30 Nov 2022 12:33 AM
Last Updated : 30 Nov 2022 12:33 AM
சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்வரும் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் இருந்த சிக்கல் தீர்வுக்கு வந்துள்ளது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். படத்திற்கான வசனத்தை விவேக் எழுதி உள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் பிவிபி சினிமா தயாரித்துள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிடுகிறது.
இந்த படத்தில் ராஷ்மிகா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீமன், ஜான் விஜய், விடிவி கணேஷ், சஞ்சனா சாரதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே’ கடந்த 5-ம் தேதி வெளியாகி இருந்தது. இதனை நடிகர் விஜய் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Varisu - WORLDWIDE PONGAL RELEASE
— Seven Screen Studio (@7screenstudio) November 29, 2022
The Boss Returns #VarisuPongal #Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @Jagadishbliss#VarisuHoardings pic.twitter.com/bWbq8YYgsp
Sign up to receive our newsletter in your inbox every day!